Friday, May 30, 2008

ஆங்கிலவிசைப்பலகைக்கான தமிழ் எழுத்துருக்கள்


தமிழிலே எழுதுவது எப்படி?

நாம் “Bamini” எழுத்துருவினையே தான் பொதுவாக எமது தமிழ் தட்டச்சு வேலைகளிற்கு பயன்படுத்துகின்றோம். “Microsoft office”ல் பயன்படுத்தும் மாதிரி நாம் இணையத்தினில் எழுத முடியாது. ஆகவேதான் அதற்கு ஆங்கில எழுத்துருக்களினை தமிழிலே மாற்றம் செய்து உபயோகிக்கின்றோம். சரி. நீங்கள் அனைவரும் இதனைப்பற்றி அறிந்திருப்பீர்கள் என நினைக்கின்றேன். தமிழிலே எழுதுவதற்கு சுரதாயாழ்வாணனின் தட்டச்சுசெயலிக்காக தொடர்பு கீழே தரப்பட்டுள்ளது. தொடர்பிலே சொடுக்குவதன் மூலம் அதனை பயன்படுத்தலாம். உபயோகித்துபாருங்கள். சந்தேகங்கள் இருந்தால் எமக்கு அஞ்சல் செய்யவும்.

www.jaffnalibrary.com/tools/unicode.htm

பின்னூட்டல் ஒன்றை எவ்வாறு எழுதுவது?

ஓவ்வொரு அங்கத்தவர்களின் ஆக்கங்களின் இறுதிப்பகுதியில் பின்னூட்டல்கள் என்று ஒரு பகுதி தரப்பட்டிருக்கும். அதிலே சொடுக்குவதன் மூலம் நீங்கள் உங்கள் பின்னூட்டலினை விட்டுச்செல்லலாம். ஆனால் தள நிர்வாகியினால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே உங்கள் பின்னூட்டல் பார்வைக்கு விடப்படும். (தேவையற்ற குழப்பங்களினை தவிர்க்கவே இந்த வழி).

ஆக்கங்கள் பற்றி....

இந்த கலந்துரையாடல் தளத்தில் நீங்களும் ஓர் அங்கத்தவர் ஆயின் உங்களின் விபரக்கொத்துடன் உறுப்பினர் பட்டியலில் உங்கள் பெயர் இடம் பிடித்திருக்கும். இத்தளத்திலே எவ்வாறு எமது பதிவுகளினை மேற்கொள்வது என்ற சந்தேகம் உங்களிடம் இருக்கலாம். உங்கள் ஆக்கம் தமிழாக இருப்பினும் சரி ஆங்கிலமாக இருப்பினும் சரி! தளநிர்வாகியின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைத்தால் போதும். உங்கள் ஆக்கம் தளத்தினிலே பிரசுரிக்கப்படும். எவ்வாறான ஆக்கங்கள் அனுப்ப முடியும்? எவ்வாறான ஆக்கங்கள் என்றாலும் சரி. அது பிரசுரிக்க கூடிய வகையில் இருந்தால் போதும். நாம் பிரசுரிப்போம்.

எமது நோக்கம்...!

B.C.A.S தனியார் நிறுவனத்தினிலே கல்விபயிலும் மாணவர்களினை ஒன்றிணைக்கவும் அவர்களினது ஆக்கங்களினை பதிவுசெய்யும் முகமாகவும் இந்த தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ் எழுத வாசிக்கக்கூடியவர்களாக நீங்கள் இருந்தால் தான் தங்களை இங்கு பதிவு செய்து கொள்ள முடியும். எனவே தங்கள் முழுப்பெயரினையும் மின்னஞ்சல் முகவரியினையும் தள நிர்வாகிக்கு அனுப்பிவிட்டால் போதும். நீங்களும் இத்தளத்தினிலே உறுப்பினராகி விடுவீர்கள்.தள மின்னஞ்சல் முகவரி (webgroup.bcas@live.com) இந்நிறுவனத்திலே கல்விபயிலும் நாம் ஒரு நாள் அல்ல ஒருநாள் பிரியத்தான் போகின்றோம். எனவே அந்த பிரிவின் தாக்கத்தினை குறைக்கும் முயற்சி தான் இது! இவ்வாறானதொரு முயற்சிக்கு தங்கள் ஆதரவு கிடைக்கும் என்று நினைக்கின்றேன்.

நன்றி.
தளநிர்வாகி