Saturday, June 28, 2008

போலி Webcamம் சில சுட்டிகளும்....


ஏதாவது ஒரு Messangerல் Chatல் இருக்கின்றீர்கள்.உங்களிடம் வெப்கேமே இல்லை.எனினும் மறுமுனையில் இருப்பவரிடம் உங்களிடம் வெப்கேம் இருப்பது போல் பாவ்லா காட்ட ஆசையா?.அவர் போன்றோர்க்கு உதவுவது தான் இந்த போலி வெப்கேம். Fakewebcam இந்த மென்பொருளை நிறுவிவிட்டு பின் அதில் ஒரு போலி வெப்கேம் வீடியோவை ஓட விட்டு விட்டால் மறுமுனை மனசு அதை உண்மையென்றே நம்பிவிடுமாம். டைப்புவதில் மட்டும் அல்ல வெப்கேமில் தோன்றுபவரிலும் பொய் இருக்கலாம்.உசாராயிருங்கள் அவதார்களே. கூகிளில் inurl:view/index:shtml அல்லது inurl:viewerframe?mode= எனத் தேடினால் ஆயிரக்கணக்கான திறந்த கேமராக்கள் உங்கள் பார்வைக்கு வரும்.அதெல்லாம் அங்காங்கே ரோடுகளிலும் ஓட்டல்களிலும் பார்க்குகளிலும் ஒழுங்காக பாதுகாக்கப்படாத CCTV security கேமராக்கள். இதை பார்வையிட Axis Live View அல்லது live applet அல்லது webview livescope இதிலெதாவது ஒரு ஆக்டிவெக்ஸ் கன்ட்ரோல் (Active X control) நீங்கள் நிறுவ அனுமதிக்க வேண்டிவரும். அவ்வளவுதான்.முழுக் கேமராவும் உங்கள் கைபிடிக்குள் வந்து விடும். இஷ்டப்படி கேமராவை மேலே கீழே இடது வலது வென நகர்த்தலாம்.கேமரா தானாகவே நகர்வதை பார்த்து அங்கிருந்து நோக்கும் அன்னியர்கள் சற்று கிலியிலேயே கேமராவை பார்ப்பர்.உதாரணத்துக்கு கீழ்கண்ட சுட்டியைப் பாருங்கள்.எங்கோ ஒரு ரெஸ்டாரன்டின் பாதுகாப்பு கேமரா பாதுகாப்பேயின்றி.
இது இன்னொன்று.உலகின் எங்கோ ஒரு தெருமுனை.நான் பார்த்ததிலேயே மிக வேகமாக ஸ்டிரீம் செய்யும் கேமரா.லைவ்வாய் உலகை காட்டுகின்றது.

http://213.196.182.244/view/index.shtml கீழ்க்கண்ட இணையதளத்தில் இதுமாதிரி ஏகப்பட்ட அனாதை கேமராக்களை கண்டுபிடித்து உங்களுக்காக கண்காட்சி போல் அடுக்கி வைத்திருக்கின்றார்கள்.
இந்த கட்டுரை கல்விநோக்கத்திற்காகவே உங்களிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை பயனுள்ள முறையில் கற்றுத்தெளியுங்கள்.
பதிவு: ம.கஜதீபன் (HND-19)




Wednesday, June 25, 2008

பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்....!

பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல் என்றுஅழைத்திருப்பார்கள். அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்.

Save = வெச்சிக்கோ
Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ
Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ
Help = ஒதவு
Find = பாரு
Find Again = இன்னொரு தபா பாரு
Move = அப்பால போ
Mail = போஸ்ட்டு
Mailer = போஸ்ட்டு மேன்
Zoom = பெருசா காட்டு
Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு
Open = தெற நயினா
Close = பொத்திக்கோ
New = புச்சு
Old = பழ்சு
Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு
Run = ஓடு நய்னா
Execute = கொல்லு
Print = போஸ்டர் போடு
Print Preview = பாத்து போஸ்டர் போடு
Cut = வெட்டு - குத்து
Copy = ஈயடிச்சான் காப்பி
Paste = ஒட்டு
Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு
Delete = கீச்சிடு
anti virus = மாமியா கொடுமை
View = லுக்கு உடு
Tools = ஸ்பானரு
Toolbar = ஸ்பானரு செட்டு
Spreadsheet = பெரிசிட்டு
Database = டப்பா
Exit = ஓடுறா டேய்
Compress = அமுக்கி போடு
Mouse = எலி
Click = போட்டு சாத்து
Double click = ரெண்டு தபா போட்டு சாத்து
Scrollbar = இங்க அங்க அலத்தடி
Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு
Next = அப்பால
Previous = முன்னாங்கட்டி
Trash bin = கூவம் ஆறு
Solitaire = மங்காத்தா
Drag & hold = நல்லா இஸ்து புடி
Do you want to delete selected item? = மேய்யாலுமே தூக்கிறவா?
Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?
Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?
Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு
Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?
General protection fault = காலி
Access denied = கை வச்ச... கீச்சுடுவேன்!
Unrecoverable error = படா பேஜார்பா
Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்
Windows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு

பதிவு: செல்வி.வசந்தகுமார்(HND-21 General)

Friday, June 20, 2008

தள நிர்வாகியிடமிருந்து....

அன்புக்குரிய தள பார்வையாளர்களே மற்றும் உறுப்பினர்களே! எமது உறுப்பினர் பகுதியிலே இணைக்கப்பட்டிருக்கும் உறுப்பினர்களினைப்பற்றிய "குறிப்பு" பகுதி ஒரு நகைச்சுவைக்காகவே அவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது. தயவு செய்து அதிலே குறிப்பிட்டுள்ள விடயங்களிற்கும் உறுப்பினர்களிற்கும் எந்த தொடர்பும் இல்லை.பார்ப்பவர்களிற்கு சுவாரஸ்யத்தினை அதிகரிப்பதற்காகவே இவ்வாறனதொரு பகுதியை அமைத்தேன். இதனால் யாருடையாவது மனங்கள் பாதிப்படைந்திருந்தால் நான் தயவு செய்து தளத்தின் சார்பினில் மன்னிப்புக்கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி.
தள நிர்வாகி
B.C.A.S தமிழ் மாணவர் ஒன்றியம்.

கணினி " - ஆணா... பெண்ணா..?‏

கணினி " - ஆணா... பெண்ணா..?‏
ஆசிரியைக்கு உண்மையிலேயே விடை தெரியவில்லை.. எனவே மாணவர்கள் தனியாகவும், மாணவிகள் தனியாகவும் கூடிப்பேசி இதற்கு முடிவு காணுமாறு அறிவுறுத்தினார்..........மாணவிகள் கணினி ஆண்பால்தான் என்ற முடிவுக்கு வந்தார்கள்... அதற்கு அவர்கள் சொன்ன காரணங்கள் இதோ...


1) அதுக்கு எதையும் சுலபமா புரிய வைக்க முடியாது..

2) உருவாக்கினவனைத் தவிர வேறே யாருக்கும் அதோட நடைமுறையை புரிஞ்சிக்க முடியாது..

3) நாம ஏதாவது தப்பு பண்ணா மனசுலேயே வச்சிருந்து நேரம் பார்த்து மானத்தை வாங்கும்..

4) எந்த நேரத்துல புகையும்.... எந்த நேரத்துல மயங்கும்ன்னு சொல்லவே முடியாது..

5) நம்ம கிட்ட இருக்கறதைவிட அடுத்தவங்க வச்சிருக்கறது நல்லா வேலை செய்யறது மாதிரி தோணும்...!

மாணவர்களோ கணிணி பெண்பால்தான்னு சாதிச்சாங்க.. அதுக்கு ஆதாரமா அவங்க சொன்னது இதோ...

1) எப்பவுமே அடுத்த கணிணியோட ஒத்துப் போகவே போகாது..

2) எட்ட இருந்து பார்க்க கவர்ச்சிகரமா இருக்கும்.. ஆனா கிட்டபோனாதான் அதோட வண்டவாளம் தெரியும்..

3) நிறைய ஸ்டோர் பண்ணி வச்சிருக்கும்... ஆனா எப்படி பயன்படுத்தணும்ன்னு அதுக்கு தெரியாது..

4) பிரச்சினையை குறைக்கறத்துக்காக கண்டுபிடிக்கப்பட்டவை... ஆனா பெரும்பாலான சமயங்கள்ல அதுகளேதான் பிரச்சினையே..

5) அதை சொந்தமாக்கிக்கிட்ட பிறகுதான் நமக்கு புரியும்.. அடடா இன்னும் கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா இதைவிட அருமையான மாடல் கிடைச்சிருக்குமேன்னு...!


பதிவு: திரு.திருமாறன் (HND-19 ICT)

Wednesday, June 18, 2008

கழுத்துப்பட்டி அணியும் முறை....


நம்மில் எத்தனை பேருக்கு எவ்வாற சரியான முறையில் கழுத்துப்பட்டி ஒன்றினை அணிவது எப்படி என்று தெரியும்? எனவே தெரியாதவர்களிற்கு ஒரு வழிகாட்டியாகவே இந்த ஆக்கம். பயன்பெறுவீர்கள் என நம்புகின்றேன்.

பதிவு:திரு.திருமாறன்(HND-19 ICT)

Monday, June 16, 2008

அறிவித்தல்..!

சாதரணமாக ஆரம்பிக்கப்பட்ட எமது B.C.A.S தமிழ்மாணவர் ஒன்றியத்தளம் தற்போது மிகப்பபெரும் உருவெடுத்துக் கொண்டிருக்கின்றது. அதற்குக்காரணம் யார்? ஆம்! எமது மாணவர்கள் அளிக்கும் உற்சாகமும் உறுப்பினர்களாக சேரும் மாணவர்களின் ஆர்வமும் தான் காரணம். எனவே நாம் இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு தமிழ்மாணவர் ஒன்றியத்திற்கான புதிய இணையத்தளம் ஒன்றினை கட்டமைத்து வருகின்றோம். விரைவில் புதிய தளத்தின் வேலைகள் முடிவடைந்து உங்கள் உபயோகத்திற்காக தளம் திறந்துவைக்கப்படும்.

நன்றி.

தளநிர்வாகி
B.C.A.S தமிழ் மாணவர் ஒன்றியம்.







Saturday, June 7, 2008

ஆண்களினை கவர்வதற்கும் பெண்களினை கவர்வதற்குமான இலகு வழி!



ஆண் ஒருவரினை இலகுவில் எம்வசப்படுத்த 100 ரூபாய் போதும். அதே ஒரு பெண்ணை வசப்படுத்த 100000 ரூபாய்களும் காணாது.! இதனை மேலுள்ள படம் உங்களிற்கு உணர்த்தும்....
பதிவு: புஸ்பராஜா பாலநரேஸ்(HND-19 ICT)




விரலில் கலை...(ஜோ.சாம்சனின் ஆக்கம்)






கலையுணர்வு அதிகமாவர்கள் எதையும் விட்டுவைக்கமாட்டார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு!


Wednesday, June 4, 2008

பிறந்தநாளை கொண்டாடிய சகமாணவிக்கு வாழ்த்துக்கள்


HND-19ல் கல்விபயிலும் செல்வி.கமலாஜினி தனது பிறந்தநாளினை எமது வகுப்பிலே கடந்த 2ம் திகதி கொண்டாடினார். அது எத்தனையாவது பிறந்தநாள் என அவரைத்தவிர எவருக்கும் தெரியாது. அவர் அதனை சொல்லவும் விரும்பவில்லை. எனவே B.C.A.S தமிழ் மாணவர் ஒன்றியத்தின் சார்பில் நாம் வாழ்த்துக்களினை தெரிவித்துக்கொள்கின்றோம்.

நன்றி!