Thursday, July 24, 2008

புதிய தட்டச்சு நிரலி.....

அண்மையில் தமிழ் தட்டச்சிலே ஒரு புதிய மாற்றம் என்று தான் கூறவேண்டும். ஆம் இதுவரைகாலமும் சுரதா யாழ்வாழ்வாணனின் ஒன்லைன் தமிழ் தட்டச்சு செயல் நிரலியைத்தான் பயன்படுத்தினோம். அத்துடன் சிலர் வேறு நிரலிகளையும் பயன்படுத்தினார்கள். ஆனால் தற்போது என்.ஏச்.எம் நிறுவனத்தின் தட்டச்சு செயல்நிரலி அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது அந்நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பு. இதற்கு முன்னரும் தமிழ் எழுத்துருக்களிற்கான ஒன்றினையும் வெளியிட்டிருந்தார்கள். அந்த பிழைகள் திருத்தப்பட்டு மீண்டும் புத்துயிர் பெற்று வந்துள்ளது. விஷேடமாக புதிய தட்டச்சு செயல் நிரலியைப்பற்றி கூறவேண்டுமெனில், இந்நிரலி தன்னகத்தே தமிழின் பல்வேறு வகையான எழுத்துருக்களினை கொண்டுள்ளது. இதனால் எந்த வகையான நிலைக்கும் எமது தமிழ் எழுத்துருவினை மாற்றியமைக்கலாம். இவற்றுடன் இன்னமொரு இனிப்பான செய்தி....!! ஆம்! இந்நிரலி இலவசமாகவே கிடைக்கின்றது. "எமக்கு இலவசம் என்றாலே போதும் தானே..." ஒரு வழி பண்ணிப்போடுவீங்கள்...! நான் அதனைப்பயன் படுத்தித்தான் இப்பதிவை தளத்தினிலே பதிந்துள்ளேன். அட ஏன் தாமதம்..! கீழே இலவசப்பதிவிறக்கத்திற்கான தொடர்பினை தந்துள்னேன். முயன்றுபாருங்கள்.. கட்டாயம் பயனர்கையேட்டினையும் சேர்த்து பதிவிறக்கம் செய்யுங்கள்.(மேலதிக உதவிக்காக)..

தட்டச்சு நிரலி: http://software.nhm.in/Products/NHMWriter/tabid/55/Default.aspx
எழுத்துருமாற்றி:

http://software.nhm.in/Products/NHMConverter/tabid/60/Default.aspx

Saturday, July 19, 2008

புதிய படைப்பாளி..

எமது BCAS கல்வி நிறுவனத்தின் தமிழ் மாணவர் ஒன்றியத்திலே அண்மையில் தன்னை இணைத்துக்கொண்ட "செல்வி.ராதா" அவர் தான் அந்த புதிய படைப்பாளி... ஆம். "புதிய கவி உலகிற்கு உங்களை வரவேற்கின்றேன்" என்று தலைப்பிட்டு தனது கவிதைகளினை பதிந்துள்ளார் ராதா... கவி வரிகள் ஒவ்வொன்றும் அவ்வளவு அருமை.. எமது தள உறுப்பினர் ஒருவர் இவ்வாறனதொரு முயற்சியெடுக்கும் போது அதனை ஊக்குவிப்பது நம் கடமையல்லவா??? கவிதைகள் மட்டுமல்ல தளத்தினையும் இரசனையுடன் வடிவமைத்துள்ளார் ராதா... ராதாவின் புதிய கவி உலகிற்கு செல்ல கீழே சொடுக்குங்கள்....

http://puthiyakavi.blogspot.com

Wednesday, July 16, 2008

MacBookAir மடிக்கணினி விலை குறைந்தது....



உலகின் மிக மெல்லிய மடிக்கணினி என்று நம்பப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக்-ஏர் கணினி விலை 500 டாலர் வரை குறைக்கப்பட்டுள்ளது.
64 எம்பி நினைவகம் கொண்ட மிகவும் விலை உயர்ந்த மேக்-புக் ஏர் மடிக்கணினி, இன்டெல் நிறுவனத்தின் கோர்-2 டுவோ சிப் கொண்டது. 1.8 மெகா ஹெர்ட்ஸ் திறனில் இயங்கும் இக்கணினி, தற்போது 2,598 டாலருக்கு விற்பனை செய்யப்படுவதாக ஆப்பிள் நிறுவன செய்தித் தொடர்பாளர் பில்இவான்ஸ் தெரிவித்துள்ளார்.
இதேபோல் 1.6 ஜிகா ஹெர்ட்ஸ் திறனுள்ள மேக்புக்-ஏர் மடிக்கணினி 1,799 டாலருக்கு விற்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரியான ஸ்டீவ் ஜாப்ஸ், கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்திய மேக்புக்-ஏர் மடிக்கணினியின் தடிமன், ஒரு இன்ச் அளவை விட குறைவு என்பதால், இது உலகின் மிக மெல்லிய மடிக்கணினி என்ற பெருமையை பெற்றது.

பதிவு: செல்வி.ராதா HND-18

கூகிள் இப்போது உங்கள் தமிழில்

இணையதளம் இன்று நம் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது.நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் உரையாடல்கள், மின் அஞ்சல் பரிமாற்றங்கள், நமது கருத்துக்களைத் தெரிவித்தல் மற்றும் விவரங்களைத் தேடுதல் போன்ற பல காரணங்களுக்காக நம்மில் பலர் இணையதளத்தைப் பயன்படுத்துகிறோம்.உங்களது நெருங்கிய கல்லூரித் தோழர் ஒருவரை உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவர் எங்கிருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்து, அவர் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து கொள்வது எவ்வளவு அற்புதமாக இருக்கும்?நீங்கள் நன்கு அறிந்துள்ள ஒரு விஷயத்தைப் பற்றிய கருத்தைத் தெரிவிக்க நீங்கள் விரும்புகிறீர்களா? நீங்கள் ஒரு சிறந்த திரைப்படவிமர்சகராக இருப்பின், இணையத்தளத்தில் உங்கள் விமர்சனங்களை நீங்கள் ஏன் வெளியிடக்கூடாது? உங்களுக்குக் விவரங்கள் ஏதேனும் தேவைபடுகிறதா? அது சமையல் குறிப்புகள், தேர்தல் விவரங்கள் போன்ற எதுவாக இருப்பினும் ஒரு பட்டனைக் க்ளிக் செய்வதன் மூலம் இவ்வனைத்தும் உங்களுக்குக் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?நீங்கள் ஆங்கிலம் பேசுபவராக இருந்தால், இவ்வனைத்தையும் மற்றும் இன்னும் அதிகமானவற்றையும் இணையதளத்தில் உங்களால் செய்ய முடியும். ஆனால், சில நேரங்களில் உங்கள் தாய்மொழியில் ஏதேனும் விஷயங்களை நீங்கள் பரிமாறிக் கொள்ள விரும்பலாம். நமது அன்றாட வாழ்வில் நாம் பெரும்பாலும் தாய்மொழியையே பயன்படுத்துகிறோம்.இதுபோல் நம்மால் இணையதளத்திலும் நம் தாய்மொழியை பயன்படுத்த முடிய வேண்டும். "கூகிள் இந்தியா"வில் உள்ள நாங்கள் இது நடைபெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அந்த முயற்சியில் நாங்கள் பின்வரும் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்.தமிழில் சுலபமாக டைப் செய்யுங்கள். முதலாவதாக, உங்கள் ஆங்கில கீபோர்டைப் பயன்படுத்தி சுலபமாக தமிழில் டைப் செய்வதற்கான ஒரு வழியை நாங்கள் உருவாக்கியுள்ளோம். ஒரு சொல்லின் ஒலிக்கு ஏற்ப நீங்கள் டைப்செய்தால் போதும்.உதாரணமாக, வழக்கமான ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தி "ennudaya" என்ற சொல்லை நீங்கள் டைப் செய்து ஸ்பேஸ் (space) தட்டினால், அது தானாக தமிழ் சொல்லான "என்னுடைய"வாக மாறிவிடும்.இத்தொழில்நுட்பமான டிரான்ஸ்லிட்ரேசன்(transliteration)ஐ நீங்கள்இந்தலாப் வலைப்பக்கத்தில் பயன்படுத்தலாம் - http://www.google.co.in/transliterate/indic/tamil. இந்த சேவையை உங்கள் கூகிள் முகப்புப் பக்கத்தில், ஒரு iGoogle gadgetஆகவும் சேர்த்துக் கொள்ளலாம். இவ்வசதி இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய இதர மொழிகளிலும் வழங்கப்படுகிறது.மக்களிடம் இருந்து பெற்ற நல்ல வரவேற்பினால், மற்ற கூகிள் சேவைகளிலும் இத்தொழில்நுட்பத்தை அளிக்க உள்ளோம்.உங்கள் நண்பர்களுக்கு ஸ்கிராப் செய்யுங்கள். "ஆர்குட்"ல் உங்கள் பள்ளித் தோழரை நீங்கள் கண்டுபிடித்து அவருடன் உரையாட முடியும்.இப்போது அவருக்கு உங்களால் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஸ்கிராப்களை(http://www.orkut.com/scrapbook.aspx ) அனுப்ப முடியும்.உங்கள் கருத்துக்களை வெளியிடுங்கள். உங்கள் மனம் கவர்ந்த மற்றும் நன்கு தெரிந்த விஷயம் குறித்த உங்கள் கருத்துக்களை நீங்கள் வெளியிட விரும்பினால், உங்கள் சொந்த பிளாக்(http://blogger.com/indic/ta ) ஒன்றை உருவாக்கி, அதில் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உங்கள் கருத்துக்களை வெளியிடலாம்.எளிதாக வலைத்தளங்களைத் தேடுங்கள். கூகுளில் இப்போது தமிழ் மொழியில் எளிதாக வலைத்தளங்களைத் தேட முடியும். கூகிள் தமிழ் தேடுதல்(http://www.google.co.in/ta ) பக்கத்திற்குச் சென்று ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தி உங்கள் கேள்வியை டைப் செய்யத் தொடங்கினால் போதுமானது. அதனை நாங்கள்தமிழில் மாற்றி, நீங்கள் டைப் செய்யத் தொடங்கியதன் அடிப்படையிலான கேள்விகளைப் பரிந்துரைப்போம்.உதாரணமாக, ரஜினிகாந்தைப் பற்றிய விவரங்களைக் கண்டுபிடிக்க நீங்கள் விரும்பினால், நீங்கள் "Rajinikanth" என்று டைப் செய்யத் தொடங்கினாலே போதும், நாங்கள் "ரஜினிகாந்த்" என்று உங்களுக்காக பரிந்துரைப்போம்.இந்தியில் எளிதாக மொழிபெயருங்கள். கூகுளில் இந்தி மொழிபெயர்ப்பு சேவையாக கூகிள் டிரான்ஸ்லேட்TM அறிமுகமாகியுள்ளது. இந்தி மற்றும் ஆங்கில மொழிக்கு இடையிலான மொழிபெயர்ப்பைத் தானியங்கு முறையில் செய்வதற்கு இச்சேவை உதவுகிறது.நீங்கள் ஏதேனும் உரை அல்லது ஒரு வலைப்பக்கத்தை மொழிபெயர்க்க விரும்பினால் பின்வரும் வலைத்தளத்தில் அதை எளிதாகச் செய்து கொள்ளலாம்: http://www.google.com/translate_t. இன்று இணையதளத்தில், இந்தி தேடுசொற்களுக்கான இந்தி வலைபக்க முடிவுகளில் போதுமான விபரங்கள் கிடைப்பதில்லை. இந்நிலைமாறுமென்று நாங்கள் நம்புகிறோம்.ஆனால் இடைப்பட்ட நேரத்தில்,தேடுசொற்களை இந்தியில் அளித்து, அதற்கு பொருத்தமான ஆங்கில பக்கங்களைத் தேடி, முடிவுகளாக வரும் ஆங்கில பக்கங்களை இந்திக்கு எளிதாக மொழிபெயர்க்க கூகிள் டிரான்ஸ்லேட் உதவும்: http://www.google.com/translate_s.இந்திய மக்கள் தொகையில், சுமார் 13% மக்கள் மட்டுமே ஆங்கில அறிவு பெற்றவர்களாக உள்ளனர். இதனை கவனத்தில் கொண்டு, ஒருவரது ஆங்கில அறிவு எந்த அளவில் இருந்தாலும், இணையத்தளத்தின் மாபெரும் பயன்களை அவர் அடைவதை உறுதி செய்யும் வகையில் இந்த சேவைகள் அமைந்துள்ளன.நாம் அறிந்துள்ள மொழிகளைப் போலவே இணையதளத்தையும் பன்மொழிக் கழகமாக மாற்றுவோம். நண்பர்களுடன் பேசுங்கள், கருத்துக்களை வெளியிடுங்கள், உள்ளடக்கங்களை உருவாக்கி, இணையத்தளத்தில் விபரங்களை உங்கள் மொழியில் பெறுங்கள்.

பதிவு: செல்வி.ராதா (HND-18)

Tuesday, July 15, 2008

புதிய தள முகவரி அறிமுகம்..! (ஒளிக்கோப்பு)

எமது புதிய தள முகவரி அறிமுகம்....

எமது புதிய தள முகவரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எமது உறுப்பினர்களின் நன்மை கருதி இரண்டு முகவரிகளும் சேவையிலுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

www.tbcas.tk


மடிக்கணனிகளிற்கு ஓய்வு..






ஆம்!. மடிக்கணனிகளிற்கு ஓய்வு கொடுப்பதற்காக தான் மேலே நீங்கள் பார்த்த கணனி அமைக்கப்பட்டுள்ளது. இவை நான்காவது தலைமுறையினல் பயன்படுத்தக்கூடிய வகையிலான ஒரு தயாரிப்பாகும். இக்கணனியை விஞ்ஞானிகள் Bluethooth தொழிநுட்பத்தைக்கொண்டு ஆக்கியிருக்கிறார்கள். இந்த பேனா வடிவான கணனியை நீங்கள் சமாந்தரமாக இருக்கக்கூடிய இடத்தினில் வைத்து கணனி விசைப்பலகையாகவும் கணனித்திரையாகவும் பயன்படுத்தலாம். இது எமது சாதாரண மேசைக்கணனியைப்போன்று இயங்கு திறன் உடையதெனவும் தயாரிப்பாளர்கள் கூறுகின்றார்கள்.எனவே மடிக்கணனிகளிற்கு விடைகொடுப்போமா????


பதிவு:செல்வி.வசந்தகுமார் HND-21

Monday, July 7, 2008

Rapidshare virusகள் அவதானமாயிருங்கள்...!


Windows XPல் அடிப்படையிலேயே Firewall ஒன்று ஓடிக்கொண்டே உள்ளதால் இப்போதெல்லாம் Virusகள் தானாக வந்து உங்கள் கணிணியை தாக்குவது அபூர்வமே.மாறாக நாமாகப் போய் வம்பை விலைக்கு வாங்கிக் கொண்டால் தான் உண்டு.ஏடாகூடாமான தளம் எதற்காவது போய் அங்கு தோன்றும் ஒரு Pop Up Windowவில் "Yes" சொல்லி Virus விலைக்கு வாங்கும் ரகம் பாமர கணிணி பயனர்கள் ரகம் எனில் தேடிப்போய் ஒரு குறிப்பிட்ட ".exe" கோப்பை Rapidshareலிருந்தோ அல்லது இது போன்ற இன்ன பிற கோப்பு கிடங்குகளிலிருந்தோ இறக்கம் செய்து அது வழி வைரசை தங்கள் கணிணிக்கு இறக்குமதி செய்யும் ரகம் கீக் (Geek) கணிணி பயனர்கள் ரகம். எதாவது ஒரு பயன்பாடு வேண்டுமெனில் உடனே அதற்காக பட்டென ஏதாவது ஒரு Rapidshare சுட்டியிலிருந்து அதை இறக்கம் செய்வது அத்தனை பாதுகாப்பானதல்ல. முடிந்த வரைக்கும் நம்பகமான தளத்திலிருந்து மட்டுமே "Executable"-களை இறக்கம் செய்வது நல்லது. அல்லது இறக்கம் செய்ததும் நன்றாக Scan செய்ய ஒரு நல்ல Virus scannerராவது உருப்படியாய் வைத்திருத்தல் வேண்டும்.MP3 கோப்புகள், வீடியோ கோப்புகள், PDF கோப்புகள் ,சில சமயம் CBTகள் இது தவிர பிற வகை கோப்புகளை முக்கியமாய் exe கோப்புகளை இறக்கம் செய்து உங்கள் கணிணியில் ஓட விடுதல் அத்தனை பாதுகாப்பான பழக்கம் அல்லவே. எவர் என்ன நோக்கில் அந்த மென்பொருளை அங்கு சேமித்து வைத்துள்ளாரோ? அதனுள் ஏதாவது வைரசோ அல்லது பிற மர்ம Torjanகளோ ஒளிந்திருந்தால் அது நமக்கு சுத்தமாய் தெரிவதில்லை. நம்மில் பலரும் virusல் மாட்டிவிடல் இப்படித் தான்.அது இப்படி இருக்க, இங்கே ஒரு tip.Rapidshareல் 100MB-க்கும் பெரிதான கோப்புகளை சேமிக்க முடியாததாகையால் டிவிடிக்களை நூறு நூறு Meg-காக பல .rar துண்டுகளாக்கி ஒரு குழுவாக இணைஏற்றம் செய்து வைத்திருப்பார்கள். பத்து .rar கோப்புகளில் ஒன்பதை பல மணிநேரமாய் இறக்கம் செய்த பின் 10வது இறக்கமாக மறுக்கும். அனைத்தையும் இறக்கம் செய்யாமல் Winrar-ம் அவ்வீடியோவை Extract செய்யவிடாது. குறைந்தது இறக்கம் செய்துள்ள அந்த ஒன்பது .rar கோப்புகளில் உள்ள வீடியோவையாவது பார்க்க வழியுள்ளதா?ஆம் உள்ளது.அந்த .rar கோப்புக் குழுவை விரிவாக்கம் செய்யும் முன் மறக்காமல் "Keep broken files" -ஐ Winrar-ல் tick செய்துகொள்ளுங்கள். பத்தாவதை பார்க்க இயலாவிட்டாலும் மற்ற ஒன்பதையாவது பார்க்கலாம்.

பதிவு:ம.கஜதீபன் (HND-19 General)

செல்போனில் காமிக்ஸ் புத்தகம் படிக்கலாம்...!!

வெள்ளித்திரை, சின்னத்திரை என பல்வேறு வடிவங்களில் மொழி வித்தியாசமின்றி மக்கள் மனதை கவர்ந்த காமிக்ஸ் ஹீரோக்கள், விரைவில் செல்போனில் வலம் வர உள்ளனர்.

ஜப்பானில் இந்த வசதி கடந்த சில நாட்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து செல்போனில் காமிக்ஸ் புத்தகங்களை மெய்மறந்து படிக்கும் தொழிலதிபர்களை பார்ப்பது சகஜமாகிவிட்டது. இதையடுத்து காமிக்ஸ் புத்தக தயாரிப்பாளர்களும் தங்களது பதிப்புகளை டிஜிட்டல்மயமாக மாற்றும் பணியில் அதிக முனைப்பு காட்டி வருகின்றனர்.

ஆப்பிள் நிறுவனம் தனது மேம்படுத்தப்பட்ட புதிய ஐ-போனை கடந்த 11ம் தேதி அறிமுகப்படுத்தியது. இதில் காமிக்ஸ் புத்தகங்களை எளிதாக படிக்க முடியும் என்பதுடன் அவற்றை பதிவு செய்து பாதுகாக்கவும் முடியும் என்பதால், செல்போன் காமிக்ஸ் துறை அபார வளர்ச்சி பெறும் என தொழில்நுட்ப வல்லுனர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜப்பானில் இதற்கு கிடைத்துள்ள வரவேற்பு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளதால், விரைவில் பிற நாடுகளிலும் செல்போனில் காமிக்ஸ் புத்தகங்களை படிக்கும் சேவை அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



பதிவு:திரு.திருமாறன் (HND-19)

2020ல் மனித அறிவுக்கு இணையான கணினி..!

மனித அறிவுக்கு இணையாக செயல்படக் கூடிய கணினி வரும் 2020ம் ஆண்டுக்குள் சாத்தியமாகும் என அமெரிக்க கம்ப்யூட்டர் வல்லுனர் குருரே கர்ஸ்வில் தெரிவித்துள்ளார். லண்டனில் நடந்த அறிவியில் முன்னேற்றத்திற்கான அமெரிக்க கூட்டமைப்பு ஆண்டுக் கூட்டத்தில் பேசிய போது இதனை தெரிவித்த அவர், அக்சலர்ரேட்டிங் ரிட்டர்ன்ஸ் விதி' ( law of accelerating returns) இதற்கு பேருதவியாக இருக்கும் என தாம் நம்புவதாக கூறினார். தொழில்நுட்பத்துறை நாளுக்கு நாள் வளர்ந்து வருவதால், மனித அறிவை மிஞ்சும் நவீன கணினியும் உருவாக்கப்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை என்றும் குருரே தெரிவித்தார். மனிதனின் உடலில் ஏற்படும் நோய்கள் மற்றும் முதுமை ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்தால் மனித ஆயுளை நீட்டிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.


பதிவு:திரு.திருமாறன் (HND-19)

தடுப்பூசி மரணங்கள்!

கண்டம் விட்டுக்
கண்டம் பாயும்
அழிவுச் சக்திமிக்க
ஏவுகணைகள்!

வானிலும்
ஒற்றர்களாய்
விண்கோள்கள்!

விண்ணில்
மண்ணில் நீரில் பயணம்
செய்திட
புதுமைகள் மிக்க
வாகனங்கள்!

உலகின் நிகழ்வுகளை
உடனே அறிந்திட
தொலைக்காட்சி
வானொலிகள்!

பூவுலகின்மூலை
முடுக்கெல்லாம்தொடர்பு
கொண்டிடதொலைபேசி
செல்பேசிகள்!

பரந்த பூபாளத்தைச்சிறு
அறைக்குள்சுருக்கி விட்டதகவல்
தொழில் நுட்பம்!

வெப்ப குளிர்
பிரதேசங்களில்
வசிப்பவர் வசதிக்காக
குளிரூட்டி வெப்பமூட்டிகள்!

பழுதடைந்தஉறுப்புகளுக்குப்
பதில்மாற்றுறுப்பு பொருத்தங்கள்!

இன்னும் சொல்லிமாளா
எத்தனை யெத்தனை
யோசாதனைகள் புதுமைகள்
இவ்வறிவியல் யுகத்தில்!

இருப்பினும்அடிக்கடி
நிகழ்கின்றனநோய்தடுப்பு
மருந்துகளால்
மழலையரின் மரணங்கள்!

இவற்றுக் கெல்லாம்யார் பொறுப்பு?
எப்படி தவிர்க்கப் போகிறோம்?


(அண்மையில் இந்தியாவிலே நோய் தடுப்புமருந்து மாற்றி ஏற்றப்பட்ட மரணமடைந்த குழந்தைகளினை ஞாபகப்படுத்துமுகமாக இப்பதிவு அமைகின்றது..)


பதிவு: திரு.திருமாறன் HND-19

Thursday, July 3, 2008

வயர்லெஸ் கீ-யையும் hack-பண்ணலாம்...



மடிக்கணிணி (Laptop) -களின் பெருக்கத்தால் வீடுகள் தோறும் "வயர்லெஸ் ரவுட்டர்" (Wireless Router) வழி கம்பியில்லா இன்டர்நெட் இணைப்பு (Wi-Fi) வைத்துகொள்ளல் ரொம்ப வசதியாகவும் சாதாரணமாகவும் ஆகிக் கொண்டிருகின்றது .அது பாதுகாக்கப்படாத (Unsecured) வலையமாக அமைக்கப்பட்டிருந்தால் யார் வேண்டுமானாலும் உங்கள் கணிணிகளின் நெட்வொர்க்கோடு தன்னை இணைத்து கொள்ளலாம். வலை மேயலாம். வீட்டிற்கு வெளியே கன நேரமாக ஒரு கார் நின்று கொண்டிருந்தால் அநேகமாக உள்ளே அமர்ந்திருந்து யாரோ உங்கள் இணைய இணைப்புவழி இலவசமாய் வலை மேய்கின்றார்கள் என தாராளமாய் சந்தேகபடலாம். அவன் என்ன கூத்தெல்லாம் இணையத்தில் பண்ணுகிறானென யாருக்கு தெரியும். ஆனால் உங்கள் ipaddress தான் தடத்தில் இருப்பதால் நீங்கள் தான் பொறுப்பாளியாகின்றீர்கள்.இதை தடுக்க வந்தது தான் WEP (Wired Equivalent Privacy) எனப்படும் கீ (Key) உள்ளீடும் முறை. இதன்படி உங்கள் வீட்டு வலை பாதுகாக்கப்பட்ட வலை (Secured) யாகின்றது. யாருக்கெல்லாம் அந்த கீ தெரியுமோ அவர்கள் மட்டுமே உங்கள் இணைய இணைப்புவழி இணையம் மேய முடியும்.ஆனால் அந்த பாதுகாப்பையும் முறியடிக்க வழிகள் வந்து விட்டது.இங்கே படிப் படியாக இந்த கீயை எப்படி உடைத்து கண்டுபிடிக்கலாமென வழி சொல்கின்றார்கள். A step-by-step to breaking WEP key என்ன Aircrack Airodump WepAttack என சிலப்பல hacking மென் உபகரணங்களை சிறப்பாக பயன்படுத்த தெரிய வேண்டும்.அண்டை வீட்டாரின் WEP key எளிதாய் உங்கள் வசப்படும்.அப்புறமென்ன இலவச இணைய இணைப்புதான். :)இன்னொரு வழி Default Password-யை பயன்படுத்துதல்.அதாவது பெரும்பாலான "வயர்லெஸ் ரவுட்டர்"-களின் Default Admin Password-யை யாரும் மாற்றுவதில்லை என ஒரு சர்வே சொல்கிறது.இங்கே சென்றால் அனைத்து "வயர்லெஸ் ரவுட்டர்"-களின் Default Admin Password-களையும் காணலாம்.DEFAULT WIRELESS SETTINGS கொடுத்து முயன்று பார்த்தால் அதிஷ்டம் இருந்தால் சரியாய் மாட்டும்.உள் புகுந்து WEP கீயை கண்டுபிடித்து கலக்கலாம்.இதையெல்லாம் தடுப்பது எப்படி?முதல் வேலை உங்கள் வயர்லெஸ் ரவுட்டரின் Default Admin Password-ஐ மாற்றிவிடுங்கள். பின்னர் உங்கள் பாதுகாப்பை WEP-யிலிருந்து இப்போதைக்கு அதிகம் பாதுகாப்பு கொடுக்கும் WPA- (Wi-Fi Protected Access) க்கு மாற்றிவிடுங்கள்.மேலும் சில வழிமுறைகள் இங்கே,
Home Wireless Security Settings Tips





பதிவு: ம.கஜதீபன் (HND-19 General)