Monday, July 7, 2008

செல்போனில் காமிக்ஸ் புத்தகம் படிக்கலாம்...!!

வெள்ளித்திரை, சின்னத்திரை என பல்வேறு வடிவங்களில் மொழி வித்தியாசமின்றி மக்கள் மனதை கவர்ந்த காமிக்ஸ் ஹீரோக்கள், விரைவில் செல்போனில் வலம் வர உள்ளனர்.

ஜப்பானில் இந்த வசதி கடந்த சில நாட்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து செல்போனில் காமிக்ஸ் புத்தகங்களை மெய்மறந்து படிக்கும் தொழிலதிபர்களை பார்ப்பது சகஜமாகிவிட்டது. இதையடுத்து காமிக்ஸ் புத்தக தயாரிப்பாளர்களும் தங்களது பதிப்புகளை டிஜிட்டல்மயமாக மாற்றும் பணியில் அதிக முனைப்பு காட்டி வருகின்றனர்.

ஆப்பிள் நிறுவனம் தனது மேம்படுத்தப்பட்ட புதிய ஐ-போனை கடந்த 11ம் தேதி அறிமுகப்படுத்தியது. இதில் காமிக்ஸ் புத்தகங்களை எளிதாக படிக்க முடியும் என்பதுடன் அவற்றை பதிவு செய்து பாதுகாக்கவும் முடியும் என்பதால், செல்போன் காமிக்ஸ் துறை அபார வளர்ச்சி பெறும் என தொழில்நுட்ப வல்லுனர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜப்பானில் இதற்கு கிடைத்துள்ள வரவேற்பு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளதால், விரைவில் பிற நாடுகளிலும் செல்போனில் காமிக்ஸ் புத்தகங்களை படிக்கும் சேவை அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



பதிவு:திரு.திருமாறன் (HND-19)

No comments: