Thursday, August 7, 2008

செல் பேசும் வார்த்தைகள்!

(எல்லாத்துக்கும் மனசுன்னு ஒன்னு உண்டு. அப்பிடிங்கறப்போ பலர் தங்களோட செல்லமா நினைச்சுக்கிட்டிருக்கிற செல்போனுக்குன்னு ஒரு மனசு இருக்காதா என்ன.. ஒரு இளைஞன்.. அவனது செல்போன் மனம் விட்டு பேசினால் எப்படி இருக்கும்! அதான் கண்ணு இது! செல் பேசும் வார்த்தைகளாகவே எண்ணிப் படிக்கவும்.)கீய்ங் கீய்ங்.. கீய்ங் கீய்ங்.. (மெசேஜ் ஒன்று வந்தடைகிறது.)செல் : நிம்மதியா தூங்க வுடுறாங்களா.. சாமத்துல யாருக்கு என்ன கொள்ளை போகுதுன்னு தெரியல.. இந்த நேரத்துல என்ன மெசேஜ் வேண்டி கிடக்கு? இப்ப இவன் எழுந்து பார்ப்பான். அப்புறம் விடிய விடிய சாட் தான். என்ன பொழப்பு இது! ஆஹா எந்திரிசிட்டான்யா.. என்னை கையில் எடுத்துட்டானே... ஆஹா பொண்டாட்டி தான் மெசேஜ் அனுப்பியிருக்கா!! இன்னும் கல்யாணமே ஆகல, அதுக்குள்ள லவ்வரு நம்பர "பொண்டாட்டி"ன்னு ஸ்டோர் பண்ணி வச்சிருக்கான். ஆமா என்ன அனுப்பியிருக்கா..?"செல்லம் தூங்கிட்டியாடா?"அடிப்பாவி நடுராத்திரி ரெண்டு மணிக்கு தூங்காம மெகா சீரியலா பார்த்துகிட்டிருப்பாங்க!ஆஹா பதில் அனுப்ப தொடங்கிட்டாண்டா"ஆமா செல்லம் இப்ப தான் தூங்கினேன்.கனவுல நீ தான் வந்த. ரெண்டு பேரும் சுவிஸ்ல டூயட் பாடிக்கிட்டிருந்தோம்."டேய்,சத்தியமா சொல்லு உன் கனவில் அவளாடா வந்தா! கடலை முட்டாயிலிருந்து காம்ப்ளான் வரை கடன் சொல்லி வாங்கின கடைக்காரர் + கடன்காரர் கந்தசாமி தான வந்தாரு! ஏன்டா என்னையும் பொய் சொல்ல வக்குற..கீய்ங் கீய்ங்.. கீய்ங் கீய்ங்..பதில் வந்துடுச்சுடா. அவ இவனுக்கு மேல படுத்துவாளே, என்ன சொல்லியிருக்கா!"உன் கனவுல நான் என்ன கலர் டிரெஸ் போட்டிருந்தேன்?"ஆமாடி, ரொம்ப முக்கியம்! என்ன டிரெஸ் போட்டிருந்த, லிப்ஸ்டிக் சரியா இருந்திச்சா!எல்லாம் வரிசையா கேளு!" டார்லிங், நீயும் நானும் ஒயிட் டிரெஸ் போட்டிருந்தோம். நீ தேவதை மாதிரி இருந்த.."டேய் நீ தேவதைய முன்னப் பின்ன பாத்திருக்கியாடா! ஒயிட் டிரெஸ்ல ரெண்டு பேரும் பேய் மாதிரி இருந்திருப்பீங்கடா!"டேய் புருஷா.. எனக்கு தூக்கம் வர மாட்டீங்கு! நா என்ன பண்ண?"ஆங்.. நல்லா வாயில வருது. ஏதாவது சொல்லிப்புடுவேன். உடம்பு, கீ-பேடுல்லாம் வலிக்குதுடா சாமி! பேயெல்லாம் பிஸியா அலையற நேரத்துல என்னடா ரொமான்ஸ் வேண்டிக் கிடக்கு.. அடங்குங்கடா!"என் பேரை மந்திரம் மாதிரி சொல்லிக்கிட்டே கண்ணை மூடி தியானம் பண்ணு. அப்படியே தூங்கிடுவ! அப்புறமா உன் கனவுல வந்து உன்னை நான் தாலாட்டுவேன். உம்ம்ம்ம்ம்மா!"ச்சீ.. தூ.. எச்சி எச்சி! உம்மான்னு அடிச்சா போதாதா.. அந்த எழவை எனக்கு வேறகொடுக்கணுமா, கருமம் கருமம். ஆமா என்ன சொன்ன உன் பேரை மந்திரம் மாதிரி சொல்லணுமா, உனக்கே இது ஓவராத் தெரியல. அதெல்லாம் சொன்னா தூக்கம் வராதுடா, உன்னால தான் தூக்கம் கெட்டுப் போச்சுன்னு வெறுப்புத்தான் வரும். லூசுப்பய! இதுக்கு அந்த மடச்சி என்ன அனுப்புறான்னு பார்ப்போம்." ஏய், எனக்கு உன் பேரைச் சொன்னா தூக்கம் வரல, வெட்கம் வெட்கமா வருது!"எனக்கு வேதனை வேதனையா வருது. எப்படா தூங்குவீங்க! தினமும் இதே தலை வேதனையாப் போச்சு! 'கண்ணை படைத்து பெண்ணை படைத்த இறைவனை விட செல்லைப் படைத்து ப்ரீ எஸ்.எம்.எஸ்ஸை படைத்த மனுசன் தான் கொடியவன்'போன ஜென்மத்துல ஆந்தையா இருந்துருப்பாங்க போல!"செல்லம், என்னை உனக்கு எவ்வளவு பிடிக்கும்?"" உலக வங்கியில இந்தியா வச்சிருக்கிற கடன் தொகையைவிட அதிகமாப் பிடிக்கும். என்னை உனக்கு எவ்வளவுடா பிடிக்கும்?"கடன்காரி, உதாரணம் சொல்ல வேற விஷயமே கிடைக்கலையா, நம்மாளு என்ன சொல்லுறான்னு பார்ப்போம்." முதல் டீச்சர். முதல் சம்பளம். முதல் கவிதை. முதல் காதல்... இதையெல்லாம் யாராவது எவ்வளவு பிடிக்கும்னு அளந்து சொல்ல முடியுமாடி! நீதான் என் முதல் காதல்"டேய் அளக்காதடா! ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இன்னொரு நம்பருக்கும் இதே மெசேஜைத் தான நீ அனுப்புன. நடத்து,நடத்து ! எனக்கு மட்டும் உண்மையை அனுப்புற சக்தி இருந்தா மவனே செத்தடா நீ!(அரை மணி நேரம் கழித்து, அந்த இளைஞன் ஒன்பதாவது முறையாக குட்நைட் சொல்லிவிட்டு 'சாட்'டை முடிக்கிறான்.)முடிச்சிட்டாங்களா! என்னது இவன் திருப்பி எதோ நோண்டுறான். ஓ.. என்னை எழுப்பச் சொல்லி அலாரம் வக்கப் போறானா.. எத்தனை மணிக்கு? அடப்பாவி உலகத்துலயே பகல் பன்னிரெண்டு மணிக்கு அலாரம் வைச்சு எந்திரிக்கிற ஒரே ஜீவராசி நீதாண்டா! அதுவரைக்கும் 'பொண்டாட்டி' திருப்பி 'சாட்'டுக்கு வராம இருந்தா சரிதான்.(காலை பதினொரு மணி..)அட என்னமோ குறுகுறுங்குதே.. ஓ எதோ ரிமைண்டர் செட் பண்ணி வச்சிருக்கான்." இன்று திங்கள்கிழமை பல் தேய்க்க வேண்டும்."அட நாத்தம் புடிச்சவனே! ரிமைண்டர் சிஸ்டத்தை கண்டுபிடிச்சவருக்கு இந்த விஷயம்தெரிஞ்சா 'ஏன்டா இப்படி ஒரு சிஸ்டத்தைக் கண்டுபிடிச்சோம்'னு தன்னைத் தானே அடிச்சுக்குவான்.விட்டா 'பல் தேய்ச்சதுக்கப்புறம் வாய் கொப்பளிக்க வேண்டும்'னு கூட ரிமைண்டர் வைப்படா நீ! டேய் எவ்வளவு நேரம் தாண்டா கத்துறது. தொண்டை வலிக்குது.எழுந்திரிச்சுத் தொலைடா. அடப்பாவி ரிமைண்டரை ஆப் பண்ணிட்டு தூங்க ஆரம்பிச்சுட்டானே! அப்ப இன்னிக்கும் பல்லைத் தேய்க்க மாட்டான் போல!டேய் நீ பல்லைத் தேய்க்க வேண்டாம்டா! எனக்கு சாப்பாடு போடு. பேட்டரில சார்ஜ் தீர்ந்துடுச்சு! சார்ஜர்ல போடுறா! இவன் காதுல எங்க விழப்போகுது. சோம்பேறி!(அரை மணி நேரம் கழித்து, இன்கம்மிங் கால் வருகிறது.)'நந்தவனத்தில் ஓர் ஆண்டி..'(ரிங்க்டோன் ஒலிக்கிறது)அவனவன் என்னன்னமோ லேட்டஸ்ட் டோன் வைச்சு அசத்திக்கிட்டிருக்கான். கஞ்சப் பய! ரிங்டோனைப் பாரு. நந்தவனத்தில் ஆண்டியாம். டேய் போனை எடுடா, யாரோ கூப்பிடுறாங்க! அப்பாடா எழுந்திரிச்சிட்டான்."ஹலோ.. ஆங்.. குட் மார்னிங் சார்.. கண்டிப்பா.. இன்னிக்கு கண்டிப்பா முடிச்சிரலாம் சார்.. இல்ல சார்.. ஆமா கொஞ்சம் பிஸி தான்.. ஒரு மீட்டிங்ல இருக்கேன்.. ப்ளீஸ் அப்புறமா பேசலாம் சார். ஓ.கே"தலையெழுத்து இவன் பண்ணுற கூத்துக்கெல்லாம் நாமளும் உடந்தையா இருக்க வேண்டியிருக்கே! மணி பன்னிரெண்டு ஆக இன்னும் 5 செகண்டுதான் இருக்கு.அலாரமா அலறக்கூட என் உடம்புல சக்தியே இல்ல! நீ தூங்கிக்கிட்டே இரு.நானும் தூங்.........(செல் ஸ்விட்ச் ஆப் ஆகிறது.)

பதிவு:திரு.நிர்மலன்

விண்டோஸ் 7 எப்போது வரும்?

படத்தினிலே சொடுக்குவதன் மூலம் அதனைப்பெரிதாக்கிப்பார்க்கலாம்.

பதிவு: செல்வி:ராதா(HND-18)



அவதானமாயிருங்கள்...!

அண்மையில் பேஸ்புக் தளத்தினில் எனக்கு கிடைத்த ஒரு அஞ்சலினையை இங்கு அப்படியே இட்டுள்ளேன். இதனை வாசித்தறிந்த பின் ஏன்டா இப்படி எல்லாம் செய்யிரீர்கள் என்று யோசிக்கத்தோன்றியது. நீங்களும் இதனை வாசித்துப்பாருங்கள் உங்களிற்கு விளங்கும்.



HIV @ COLOMBO

Please take a moment to read thisDear Friends,Kindly take a couple of minutes to go thru this mail. If usefulmay advise others also. Please pass this on to others This happened inColombo recently and may happen elsewhere also.few weeks ago, in Savoy film hall,a person felt something poking from her seat. When she got upto see what it was, she found a needle sticking out of the seat with anote attached saying "You have just been infected by HIV". TheDisease Control Center (in Colombo ) reports many similar eventsin many other cities recently. All tested needles were HIV Positive.The Center also reports that needles have been found in cash dispensers atpublic banking machines. We ask everyone to use extreme caution when facedwith this kind of situation.All public chairs/seats should be inspectedwith vigilance and caution before use.A careful visual inspection shouldbe enough. In addition,they ask that each of you pass this message along to all members of your familyand your friends of the potential danger.Recently, one doctor has narrated a somewhat similar instancethat happened to one of his patients at the Contrast Cinema in Dalugama.A young girl, engaged and about to be married in a couple of months, waspricked while the movie was going on. The tag with the needle had themessage " Welcome to the World of HIV family". Though the doctors toldher family that it takes about 6 months before the virus grows strongenought to start damaging the system and a healthy victim could surviveabout 5-6years, the girl died in 4 months, perhaps more because of the "Shockthought". We all have to be careful at public places, rest God help!Just think about saving a life by forwarding this message. Please, take aseconds of your time to pass along.With

Regards,
Kithsiri Nandasena
I.A.S, Director of Medical & Research Institue
Sri Lanka .

பதிவு:ம.கஜதீபன்(HND-19)

Wednesday, August 6, 2008

கூகிள் லைவ்லி...... ஓர் அறிமுகம்..!

நண்பருடனோ அல்லது நண்பியியுடனோ கடற்கரையில் அமர்ந்து பேசி மகிழ்ந்தது எல்லாம். ஒரு காலம்.! ஆனால் தற்போது அதற்கெல்லாம் நேரமில்லை நம்மிடையே. இந்த அவசர இணைய யுகத்தில் நாம் உலகவேகத்திற்கு ஏற்றால் போல் நம்மையும் வேகமாக்கி ஓடிக்கொண்டிருக்கின்றோம். ஆக மொத்தத்தில மனிசரோட மனிசர் கதைப்பதற்கே நேரமில்லை. ஆனால் இணைத்தளத்தினுள் நீங்களும் உங்கள் நண்பர்களும் பிளாஸ் சட்டில் கதைத்திருப்பீர்கள். ஜாவா சட்டில் கதைத்திருப்பீர்கள். ஏன் எம்.எஸ்.என்,ஜாகூ,கூகிள்,ஜ.சி.கீயூ போன்ற மென்னிரலிகளை கணனியில் நிறுவி நண்பர்களுடன் கலந்துரையாடியிருப்பீர்கள். இதற்கெல்லாம் சவாலாக வந்திருப்பது தான் கூகிளின் லைவ்லி சட். இதென்ன லைவ்லி சட்? இது ஒரு வேர்ச்சுவல் சட் ரூம். முப்பரிமாணத்தினால் ஆன உருவங்கள் ஒரு அறையிலோ அல்லது கடற்கரையிலோ அமர்ந்து பேசுவது போன்ற அமைக்கப்பட்டுள்ளது. கூகிள் நிறுவனம் இந்நிரலியை ஒரு BETA ஆகவே வெளியிட்டுள்ளது. இந்த கருப்பொருள் பெண்மணி ஒருவரினால் சும்மா விளையாட்டாக அமைக்கப்பட்டது. அதன் அமைப்பினைக்கண்ட கூகிள் உடனடியாக அதனை வாங்கி வெள்ளோட்டமாக இணையத்தினில் விட்டுள்ளது. இதன் மூலம் எமக்கு ஏற்றவாறான இடத்தினை நாமே ஒழுங்கமைத்து எமது நண்பர்களுடன் கலந்துரையாடலாம் என்பது தான் இதின் சிறப்பம்சமே! ஆக இது வெளியிடப்பட்டு சில மாதங்களே ஆகின்றன. இதனை அறிந்தவர்கள் சிலரே.. ஆகவே தான் எமது தள உறுப்பினர்களிற்காக இப்பதிவினை பதிந்துள்ளேன்.

www.lively.com இத்தளத்திற்குச்சென்று பதிவிறக்கி உபயோகியுங்கள்



பதிவு:ம.கஜதீபன் (HNd-19)





Thursday, July 24, 2008

புதிய தட்டச்சு நிரலி.....

அண்மையில் தமிழ் தட்டச்சிலே ஒரு புதிய மாற்றம் என்று தான் கூறவேண்டும். ஆம் இதுவரைகாலமும் சுரதா யாழ்வாழ்வாணனின் ஒன்லைன் தமிழ் தட்டச்சு செயல் நிரலியைத்தான் பயன்படுத்தினோம். அத்துடன் சிலர் வேறு நிரலிகளையும் பயன்படுத்தினார்கள். ஆனால் தற்போது என்.ஏச்.எம் நிறுவனத்தின் தட்டச்சு செயல்நிரலி அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது அந்நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பு. இதற்கு முன்னரும் தமிழ் எழுத்துருக்களிற்கான ஒன்றினையும் வெளியிட்டிருந்தார்கள். அந்த பிழைகள் திருத்தப்பட்டு மீண்டும் புத்துயிர் பெற்று வந்துள்ளது. விஷேடமாக புதிய தட்டச்சு செயல் நிரலியைப்பற்றி கூறவேண்டுமெனில், இந்நிரலி தன்னகத்தே தமிழின் பல்வேறு வகையான எழுத்துருக்களினை கொண்டுள்ளது. இதனால் எந்த வகையான நிலைக்கும் எமது தமிழ் எழுத்துருவினை மாற்றியமைக்கலாம். இவற்றுடன் இன்னமொரு இனிப்பான செய்தி....!! ஆம்! இந்நிரலி இலவசமாகவே கிடைக்கின்றது. "எமக்கு இலவசம் என்றாலே போதும் தானே..." ஒரு வழி பண்ணிப்போடுவீங்கள்...! நான் அதனைப்பயன் படுத்தித்தான் இப்பதிவை தளத்தினிலே பதிந்துள்ளேன். அட ஏன் தாமதம்..! கீழே இலவசப்பதிவிறக்கத்திற்கான தொடர்பினை தந்துள்னேன். முயன்றுபாருங்கள்.. கட்டாயம் பயனர்கையேட்டினையும் சேர்த்து பதிவிறக்கம் செய்யுங்கள்.(மேலதிக உதவிக்காக)..

தட்டச்சு நிரலி: http://software.nhm.in/Products/NHMWriter/tabid/55/Default.aspx
எழுத்துருமாற்றி:

http://software.nhm.in/Products/NHMConverter/tabid/60/Default.aspx

Saturday, July 19, 2008

புதிய படைப்பாளி..

எமது BCAS கல்வி நிறுவனத்தின் தமிழ் மாணவர் ஒன்றியத்திலே அண்மையில் தன்னை இணைத்துக்கொண்ட "செல்வி.ராதா" அவர் தான் அந்த புதிய படைப்பாளி... ஆம். "புதிய கவி உலகிற்கு உங்களை வரவேற்கின்றேன்" என்று தலைப்பிட்டு தனது கவிதைகளினை பதிந்துள்ளார் ராதா... கவி வரிகள் ஒவ்வொன்றும் அவ்வளவு அருமை.. எமது தள உறுப்பினர் ஒருவர் இவ்வாறனதொரு முயற்சியெடுக்கும் போது அதனை ஊக்குவிப்பது நம் கடமையல்லவா??? கவிதைகள் மட்டுமல்ல தளத்தினையும் இரசனையுடன் வடிவமைத்துள்ளார் ராதா... ராதாவின் புதிய கவி உலகிற்கு செல்ல கீழே சொடுக்குங்கள்....

http://puthiyakavi.blogspot.com

Wednesday, July 16, 2008

MacBookAir மடிக்கணினி விலை குறைந்தது....



உலகின் மிக மெல்லிய மடிக்கணினி என்று நம்பப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக்-ஏர் கணினி விலை 500 டாலர் வரை குறைக்கப்பட்டுள்ளது.
64 எம்பி நினைவகம் கொண்ட மிகவும் விலை உயர்ந்த மேக்-புக் ஏர் மடிக்கணினி, இன்டெல் நிறுவனத்தின் கோர்-2 டுவோ சிப் கொண்டது. 1.8 மெகா ஹெர்ட்ஸ் திறனில் இயங்கும் இக்கணினி, தற்போது 2,598 டாலருக்கு விற்பனை செய்யப்படுவதாக ஆப்பிள் நிறுவன செய்தித் தொடர்பாளர் பில்இவான்ஸ் தெரிவித்துள்ளார்.
இதேபோல் 1.6 ஜிகா ஹெர்ட்ஸ் திறனுள்ள மேக்புக்-ஏர் மடிக்கணினி 1,799 டாலருக்கு விற்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரியான ஸ்டீவ் ஜாப்ஸ், கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்திய மேக்புக்-ஏர் மடிக்கணினியின் தடிமன், ஒரு இன்ச் அளவை விட குறைவு என்பதால், இது உலகின் மிக மெல்லிய மடிக்கணினி என்ற பெருமையை பெற்றது.

பதிவு: செல்வி.ராதா HND-18