Wednesday, August 6, 2008

கூகிள் லைவ்லி...... ஓர் அறிமுகம்..!

நண்பருடனோ அல்லது நண்பியியுடனோ கடற்கரையில் அமர்ந்து பேசி மகிழ்ந்தது எல்லாம். ஒரு காலம்.! ஆனால் தற்போது அதற்கெல்லாம் நேரமில்லை நம்மிடையே. இந்த அவசர இணைய யுகத்தில் நாம் உலகவேகத்திற்கு ஏற்றால் போல் நம்மையும் வேகமாக்கி ஓடிக்கொண்டிருக்கின்றோம். ஆக மொத்தத்தில மனிசரோட மனிசர் கதைப்பதற்கே நேரமில்லை. ஆனால் இணைத்தளத்தினுள் நீங்களும் உங்கள் நண்பர்களும் பிளாஸ் சட்டில் கதைத்திருப்பீர்கள். ஜாவா சட்டில் கதைத்திருப்பீர்கள். ஏன் எம்.எஸ்.என்,ஜாகூ,கூகிள்,ஜ.சி.கீயூ போன்ற மென்னிரலிகளை கணனியில் நிறுவி நண்பர்களுடன் கலந்துரையாடியிருப்பீர்கள். இதற்கெல்லாம் சவாலாக வந்திருப்பது தான் கூகிளின் லைவ்லி சட். இதென்ன லைவ்லி சட்? இது ஒரு வேர்ச்சுவல் சட் ரூம். முப்பரிமாணத்தினால் ஆன உருவங்கள் ஒரு அறையிலோ அல்லது கடற்கரையிலோ அமர்ந்து பேசுவது போன்ற அமைக்கப்பட்டுள்ளது. கூகிள் நிறுவனம் இந்நிரலியை ஒரு BETA ஆகவே வெளியிட்டுள்ளது. இந்த கருப்பொருள் பெண்மணி ஒருவரினால் சும்மா விளையாட்டாக அமைக்கப்பட்டது. அதன் அமைப்பினைக்கண்ட கூகிள் உடனடியாக அதனை வாங்கி வெள்ளோட்டமாக இணையத்தினில் விட்டுள்ளது. இதன் மூலம் எமக்கு ஏற்றவாறான இடத்தினை நாமே ஒழுங்கமைத்து எமது நண்பர்களுடன் கலந்துரையாடலாம் என்பது தான் இதின் சிறப்பம்சமே! ஆக இது வெளியிடப்பட்டு சில மாதங்களே ஆகின்றன. இதனை அறிந்தவர்கள் சிலரே.. ஆகவே தான் எமது தள உறுப்பினர்களிற்காக இப்பதிவினை பதிந்துள்ளேன்.

www.lively.com இத்தளத்திற்குச்சென்று பதிவிறக்கி உபயோகியுங்கள்



பதிவு:ம.கஜதீபன் (HNd-19)





1 comment:

S.Lankeswaran said...

பயனுள்ள தகவல் மிக்க நன்றிகள்.